பென்னாகரம், டிச. 11 :
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாபெரும் தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழாசிரியர் பெருமாள் வரவேற்புரையாற்றினார். பள்ளித் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி நிகழ்வை முன்னெடுத்தார். நல்லாசிரியர் சுப்பிரமணி மாணவர்களுக்கு பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணி, பெண்மீது அவர் கொண்ட மரியாதை, தேசப்பற்று மற்றும் தமிழ் மொழிக்கான அர்ப்பணிப்பு போன்ற பல முக்கிய அம்சங்களை விளக்கிக் கூறினார்.
பின்னர் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பயிற்றுநர் சங்கர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

