தருமபுரி | டிசம்பர் 30
உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சுமங்கலி மண்டபத்தில் காணொளிக் காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
அந்நிகழ்ச்சியில், 192 நகர்புற வார்டுகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 243 கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.
2023–24 நிதியாண்டில், முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு பொன்விழாவை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 07.12.2024 அன்று கிராம ஊராட்சிகளில் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது நகர்புற உள்ளாட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகர்புற வார்டிலும் உள்ள இளைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து விளையாட்டு உபகரணங்களை பெற்று பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி முடிந்ததும் உபகரணங்களை முறையாக ஒப்படைக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று,
-
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் எறிபந்து போட்டியில் 1 தங்கப் பதக்கம்,
-
பள்ளிப் பிரிவில் தடகளம், சிலம்பம், டென்னிஸ் ஆகியவற்றில் 3 வெள்ளிப் பதக்கங்கள்என மொத்தம் ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகை பெற்றுள்ளனர்.
இதன் மூலம், தருமபுரி மாவட்டத்தின் நகர்புறங்களில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி பெற்று, மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

.jpg)