Type Here to Get Search Results !

ஏரியூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஏரியூர், டிச.24:

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றிய அலுவலகம் முன்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திமுக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றன.


இந்த கண்டன ஆர்ப்பாட்டம், திமுக கிழக்கு முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும், வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான தர்மச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏரியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி, மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், துணைச் செயலாளர்கள் சரவணன், சம்பத்குமார், சின்னு, துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும், 500-க்கும் மேற்பட்ட பெண்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies