பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 12:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையனூர் அருகே உள்ள புனையனூர் இடுகாடு பாலம் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். இன்று மதியம், அந்தப் பாலம் வழியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால், முன்பாக சென்ற இருசக்கர வாகனத்தை மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டு காலில் முறிவு காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 108 அவசர ஊர்தி சம்பவ இடத்துக்கு வந்து, இருவரையும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் சிலநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நிலைமை சீராகியது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)