தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சட்டவிரோதமாக பனங்கள் விற்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாரண்டஅள்ளி பகுதியில் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி விற்பனை செய்கிறார்கள் என்ற தகவலின் பேரில், மாரண்டஅள்ளி காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தன்கொட்டாய் பகுதியில் பனங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை போலீசார் சோதனை செய்து பிடித்தனர். விசாரணையில் அவர் மாரண்டஅள்ளி ஈ.பி. காலணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (50) எனத் தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் அவரை கைது செய்ததுடன், 1 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)