Type Here to Get Search Results !

பாலக்கோடில் தேர்தல் பாதுகாப்பு அணிவகுப்பு: துணை ராணுவம் – போலீசார் பங்கேற்பு.


தருமபுரி - மார்ச் 12:


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் உறுதி செய்யும் நோக்கில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம் வழியாக சென்று இறுதியாக பாலக்கோடு காவல் நிலையத்தை சென்றடைந்தது.


இந்த அணிவகுப்பில் கமாண்டோ தலைமையிலான துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies