இந்த மனுவை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களிடம், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஆசாம் கான், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் முனிரத்தினம், துணை செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், மற்றும் மொத்த நிர்வாகி ரஃபீக் ஆகியோர் வழங்கினர்.
மனுவில், பொம்மிடி ரயில் நிலையத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் நிலையில், பெருமளவு பயணிகள் தினந்தோறும் ரயில் சேவைகளை பயன்படுத்திவரும் காரணத்தால், பின்வரும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கிட கோரப்பட்டுள்ளது:
மனுவை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. கோவிந்தசாமி அவர்கள்,
“பொம்மிடி ரயில் நிலையம் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். எனவே பயணிகள் வசதிக்காக ரயில் நிறுத்தங்கள் வழங்குவது அவசியம். இதற்காக உரிய ரயில்வே அதிகாரிகளுடனும், அமைச்சருடனும் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,”என்று உறுதி அளித்தார்.
பொம்மிடி – தருமபுரி – சேலம் ரயில் பாதை வழியாகச் செல்லும் முக்கிய ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கினால், தருமபுரி தெற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)