முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய், வேளாண்மை, மீன்வளம், சுகாதாரம், மகளிர் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூறியதாவது:
“மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பின்தங்கிய கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசு நலத்திட்டங்கள் மக்களின் வாசலுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றன. பெண்கள் கல்வி, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம், விவசாயிகளுக்கான மானியக் கடனுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களிடம் சென்றடைய வேண்டும்,” என தெரிவித்தார்.
அவர் மேலும், “மக்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்” என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. மு. கதிரேசன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி ரத்தினம், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பாத்திமா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு. சு. சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

