தருமபுரி, நவம்பர் 12:
கணக்கெடுப்பு படிவத்தின் தலைப்புப் பகுதியில், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருப்பதால், வாக்காளர்கள் அவரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
-
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 1950
-
வாட்ஸ்அப் – தேர்தல் உதவி எண்: 94441 23456
-
தருமபுரி: 04342–260927
-
பாலக்கோடு: 04348–222045
-
பென்னாகரம்: 04342–255636
-
பாப்பிரெட்டிப்பட்டி: 04346–246544
-
அரூர்: 04346–296565
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
“தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் முழுமையாகவும் தயாரிக்கப்படுவதற்கு, வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்காக, ஒவ்வொரு குடிமகனின் பெயரும் சரியான முறையில் பட்டியலில் இடம்பெறுவது அவசியம்.”
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த கால அட்டவணையின் படி, இத்தேர்தல் பட்டியல் திருத்தப் பணி இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)