தருமபுரி, நவம்பர் 11:
இந்த ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வேண்டும் என அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, கடந்த மே 23ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வின் வைஷ்ணவ் அவர்களுக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
அந்த கோரிக்கைக்கு இணங்க, மத்திய ரயில்வே துறை கடந்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதி பதில் அனுப்பி, திருவனந்தபுரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி,
-
திருவனந்தபுரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12696) காலை 05.33 மணி அளவில் மொரப்பூரில் நின்று செல்லும்.
-
சென்னை – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12695) இரவு 07.08 மணி அளவில் மொரப்பூரில் நின்று செல்லும்.
ரயில் நின்று செல்லும் துவக்கத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தால், அரூர், பாலக்கோடு, தருமபுரி, மொரப்பூர் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)
