இந்திய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பையர்நத்தம் கோல்டன் கேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பலர் பதக்கங்களை வென்று மாநில மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் மாணவர்களின் சாதனையைக் கௌரவித்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தது.
மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள்
-
எம். வருணேஷ் (10-ம் வகுப்பு) – தங்கப் பதக்கம் (15 வயதுக்கு உட்பட்டோர்)
-
எஸ். சுதரசன் (6-ம் வகுப்பு) – தங்கப் பதக்கம் (10 வயதுக்கு உட்பட்டோர்)
-
எம். தமிழினியன் (11-ம் வகுப்பு) – வெள்ளிப் பதக்கம் (16 வயதுக்கு உட்பட்டோர்)
-
பி. நந்து (3-ம் வகுப்பு) – வெள்ளிப் பதக்கம் (8 வயதுக்கு உட்பட்டோர்)
-
பி. அகில் (5-ம் வகுப்பு) – வெள்ளிப் பதக்கம் (9 வயதுக்கு உட்பட்டோர்)
-
கே. திருமலைவாசன் (11-ம் வகுப்பு) – வெண்கலப் பதக்கம் (16 வயதுக்கு உட்பட்டோர்)
மாணவர்களின் இந்த சாதனைப் பகுதியில் பெருமையை ஏற்படுத்தியதாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
--
தகடூர்குரல் வலைத்தள செய்தி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார செய்தியாளர் – ஜெ. வெங்கடேசன்

.jpg)