தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 110 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2025–26 கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11,935 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் (இ.ஆ.ப.) அவர்கள் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 349 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 176 மாணவர்களும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 173 மாணவியர்களும் பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாநில அளவில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காரைக்குடியில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு:
-
5521 மாணவர்கள் (ஆண்)
-
6414 மாணவிகள்
என மொத்தம் 11935 மாணவர்கள் இலவச மிதிவண்டி பெற உள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசுகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் தெரிவித்ததாவது:
-
மிதிவண்டி வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் பள்ளி வருகையை எளிதாக்க உருவாக்கப்பட்டது.
-
மிதிவண்டி பயன்படுத்துவது ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் பயன்படும்.
-
அரசு பேருந்து பயணச்சலுகை, புதுமைப்பெண் திட்டம், “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்கள் உயர்கல்வி நோக்கி முன்னேற அரசின் பலமான ஆதரவு வழங்கப்படுகிறது.
-
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளை முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வழங்கப்படுகிறது.

.jpg)