அரூர், நவம்பர் 13:
2023 அக்டோபர் 3 முதல் 2025 நவம்பர் 10 வரை மனை பட்டா கோரி தலித், அருந்ததியர், பழங்குடியினர் உட்பட பல்வேறு சமூகத்தார் மனுக்கள் அளித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் கூறப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்
-
செல்லம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழானூர் கிராமத்தில் சர்வே எண் 65/2—இல் உள்ள 2.80.0 ஹெக்டேர் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து, கீழானூர் ஆதிதிராவிடர் மற்றும் கொத்தனாம்பட்டி பழங்குடியினர் மக்களுக்கு மனை பட்டா வழங்குதல்.
-
கைலாயபுரம் (127 குடும்பங்கள்), சட்டையம்பட்டி (140 குடும்பங்கள்), மத்தியம்பட்டி (60 குடும்பங்கள்), சந்திராபுரம் (30 குடும்பங்கள்) ஆகிய இடங்களில் வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து சிட்டா/பட்டா வழங்குதல்.
-
இட்லப்பட்டி சர்வே எண் 15/1–இல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி 7 குடும்பங்களுக்கு அளந்தளந்து பட்டா மற்றும் மேலும் 12 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குதல்.
-
H. ஈச்சம்பாடி, மேல்செங்கப்பாடி, கத்திரிப்பட்டி, நாட்டான் வளவு, கம்மாளை, கெளபாறை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கும் ஏழை மக்களுக்கு மனை/நில பட்டா வழங்குதல்.
-
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து வழங்குதல்.
