பாப்பிரெட்டிப்பட்டி, அக். 07 -
பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்களுக்கு, பள்ளியின் மேலாண்மை குழு சார்பில் முதல் மேலாண்மை குழு தலைவர் இளவரசன் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, முகாம் திட்ட அலுவலர்களை பாராட்டி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஆசிரியர் ராஜாமணி செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ரகு வரவேற்று பேச்சு ஆற்றினார். கணினி ஆசிரியர் பார்த்தீபன், உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில், திட்டம் முகாம் அலுவலர் பிரகாசம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

