பாப்பிரெட்டிப்பட்டி, அக். 4:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட (NSS) முகாமின் இறுதி நாளில், தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில், தீ விபத்துகள் ஏற்படும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவசரநேரங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் குறித்து மாணவர்களுக்கு நேரடி ஒத்திகை நடத்தி காட்டினர்.
தேசிய பசுமை படை (National Green Corps) ஆசிரியர் ராஜாமணி அவர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி அவர்கள், மாணவர்களிடம் நல்ல கருத்துக்களை பகிர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார். கணினி ஆசிரியர் பார்த்தீபன், உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் பங்கேற்றனர். முகாம் இறுதி நாளில், திட்ட அலுவலர் பிரகாசம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

.jpg)