தருமபுரி, அக். 4:
உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் குழுமத்தின் முக்கிய அங்கமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தருமபுரியில் தனது புதிய பிரம்மாண்டமான ஷோரூமைத் திறந்து வைத்துள்ளது. தருமபுரி 4-ரோடு அருகில், அதியமான் பேலஸ் ஹோட்டல் எதிரில் அமைந்துள்ள இந்நவீன ஷோரூமில், விசாலமான இடவசதி, நவீன வடிவமைப்புகளில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு கலெக்ஷன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் ஷோரூமைத் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர் காவேரி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி, மேற்கு மண்டல தலைவர் நெளசாத், தருமபுரி கிளை தலைவர் மனு நாயர், மேலாண்மை குழுவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா சிறப்பு சலுகையாக, தங்கம் வாங்கும் ஒவ்வொரு முறையும் இலவசமாக வெள்ளி நாணயம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரும் அக்டோபர் 10 வரை வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் 14 நாடுகளில் 410-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, சேலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட 32 கிளைகள் இயங்கி வருகின்றன.

.jpg)