பாப்பிரெட்டிப்பட்டி, அக். 11 -
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர், தனி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதோடு, திமுக ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திரு. கண்ணன், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆனால், இக்கூட்டத்தில் பொதுமக்கள் 50 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில், இம்முறை புதிய மனுக்களையும் பொதுமக்கள் வழங்கினர். இறுதியாக, ஊராட்சி செயலாளர் திரு. குணசேகரன் வரவு செலவு கணக்கை வெளியிட்டு, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.
🖋️ தகடூர் குரல் – பொம்மிடி செய்தியாளர் ஜெ. வெங்கடேசன்