தருமபுரி, அக். 10 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே கள்ள லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி பஸ் நிறுத்தம் எதிரே உள்ள மனை பிரிவு மைதானத்தில் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மாரி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த செக்கோடி சேர்ந்த விஜயகுமார், தருமபுரி அம்பேத்கர் காலனி சேர்ந்த மாதேஸ்வரன், மற்றும் ஆட்டுக்காரன்பட்டி சேர்ந்த ஜீவன் பாபு ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதில் விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார். மாதேஸ்வரன் மற்றும் ஜீவன் பாபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ள லாட்டரி வியாபாரிகளிடமிருந்து ₹16,100 ரொக்கப் பணம், 2 செல்போன்கள், மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.