பாப்பிரெட்டிப்பட்டி, அக்டோபர் 25:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் ஊராட்சியில் நாளை (25.10.2025, சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. பையர்நத்தம் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் இம்முகாம், TVSன் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (அரூர்), கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
முகாமில் இலவச கண் பரிசோதனை, கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் பிற கண் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும். குறிப்பாக கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றே கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ பயனாளர்கள் தங்களுடன் ஒரு செட் துணி, ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பிறவியிலேயே கண் குறைபாடுகள் உள்ளவர்கள், கண் நீர் வடிதல், விபத்தினால் கருவிழி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். இம்முகாம் பொதுமக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, அரூர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு எண்கள்: 85088 09018 / 96552 34137 / 75980 58417
- செய்தியாளர்: ஜெ. வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி

.jpg)