இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில், மாநில துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சத்தியமூர்த்தி, கோவிந்தசாமி, கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் சங்கச் செயலாளர் பெரியசாமி, கிழக்கு மாவட்டத் தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தி, பல தீர்மானங்களை விளக்கினர்.
காவேரி உபநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தருமபுரி மாவட்டத்தில் நீர்வளம் பெருகச் செய்ய வேண்டும், வன்னியர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மேலும் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், தமிழக உழவர் பேரிக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுதா கிருஷ்ணன், நம்பிராஜன், ராமலிங்கம், அன்பழகன், பாலகிருஷ்ணன் மற்றும் பல இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் நகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்.

.jpg)