Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுக சார்பில் சிறப்பு உதவி எண் அறிவிப்பு.


பாப்பிரெட்டிப்பட்டி, அக். 23 -

தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. இ.வெ. வேலு மற்றும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் பெ. பழனியப்பன் அவர்கள், மக்கள் நலனுக்காக ஒரு சிறப்பு உதவி எண் (📞 96263 33445) அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி இந்த எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களின் நலனே அரசின் முதன்மை குறிக்கோள்” எனவும் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தாழ்வான பகுதிகளில் நீர் வடிகால் பணிகள் மற்றும் அவசர நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies