Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே 45 வயது பெண் கழுத்தறுத்து கொலை; சாலையோரத்தில் சடலம் கண்டெடுப்பு, எஸ்.பி. நேரில் விசாரணை.


பாலக்கோடு, அக். 22 -

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சடலமாக கிடந்தது.


அப்பகுதியில் அவ்வழியாக சென்ற மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் மோப்ப நாயை வரவழைத்து ஆதாரங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.


போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொல்லப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இந்த கொலை நடந்தது என பல்வேறு கோணங்களில் பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரம் அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies