பாப்பிரெட்டிப்பட்டி, அக்டோபர் 26:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்டுரோடு அருகே உள்ள தனியார் மண்டபத்தில், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் “திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையேற்றார்.
கருத்தரங்கில் திமுக மாணவர் அணி மாநில செயலாளர் இரா. ராஜீவ்காந்தி பங்கேற்று மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான திராவிட மாடல் ஆட்சியின் பங்களிப்பு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் இரா. தமிழரசன், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கே. மனோகரன், சத்தியமூர்த்தி, இரா. சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், பிரபுராஜசேகர், சக்திவேல், சிவப்பிரகாசம், சந்தோஷ்குமார், மாது, தலைமை கழக பேச்சாளர் இராசு. தமிழ்ச்செல்வன், மாணவர் அணி உறுப்பினர்கள் சந்தர், முனுசாமி, பிரபு, புனிதா, சுர்ஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

.jpg)