பாப்பாரப்பட்டி, அக்.26:
நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மகனை பெங்களூர் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு, நேற்று காலை வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சம்பத் குமார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் இண்டூர் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்து, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பென்னாகரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இண்டூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் நாய் படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மர்ம நபர்கள் யார்? அவர்கள் எவ்வாறு வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்தனர்? என்பதனை இண்டூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

.jpg)