தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார், மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டத்தில் தமிழக முதல்வர் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (SIR) வரும் நவம்பர் 4 முதல் தொடங்கப்படுவது குறித்தும், அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை “எளியோரின் எழுச்சி நாளாக” கொண்டாடுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, ராஜகுமாரி, முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், குட்டி மோகன், ஒன்றிய மற்றும் கழக செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், ஆனந்தன், கோபால், கண்ணபெருமாள், அடிலம் அன்பழகன், மாது, பிரபுராஜசேகர், சக்திவேல், நெப்போலியன், சிவபிரகாசம், முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி கழக செயலாளர்கள் பி.கே. முரளி, வெங்கடேசன், சீனிவாசன், ஜெயசந்திரன், மோகன், கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.jpg)