தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக “தீபாவளி ஆடைகள் அறிமுக விழா மற்றும் பம்பர் குலுக்கல் பரிசுத் திட்டம்” அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களில் தினமும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு மிக்ஸி, குக்கர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பம்பர் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் சங்கர், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல், ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் ராம்குமார், தொழிலதிபர் ராஜாமணி சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், வீரமணி, மற்றும் ஸ்ரீராம் சில்க்ஸ் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஸ்ரீராம் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

.jpg)