விழா கடந்த நாள் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. முக்கிய நாளான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், நான்கு கால வேள்வி பூஜை, ரக்ஷாபந்தன, நாடிசந்தனம் உள்ளிட்ட அனைத்து யாகங்களும் நடைபெற்றன.
பின்னர் யாகசாலையிலிருந்து புனித தீர்த்த கலசம் எடுத்து வந்து, கோயில் விமானக் கலசத்திற்குப் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கலச நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அதனை அடுத்து, அருள்மிகு மல்லிகார்ஜினேஸ்வரர் மற்றும் பிரம்மாம்பிகை அம்மன் திருவுருக்கள் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூ அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி மற்றும் அம்பாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, அன்னதானம் பெற்றனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

.jpg)