Type Here to Get Search Results !

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் வெள்ளி பதக்கம் – தருமபுரி மாணவன் அமுதனுக்கு பெருமை.


பாப்பிரெட்டிப்பட்டி, அக். 09 -

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பட்டுக்கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கா.விஜயன் - வி.தனலட்சுமி தம்பதியரின் மகன் வி.அமுதன், தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு விடுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக திறமையான கபடி வீரராக விளையாடி வருகிறார்.


தற்போது தேனி மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அவர், 2025ஆம் ஆண்டிற்காக நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை (CM Trophy) பள்ளிகளுக்கிடையேயான கபடி போட்டியில் தேனி மாவட்ட அணிக்காக இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் ₹6,00,000 (ஆறு இலட்சம்) பரிசுத் தொகையை வென்று சாதனை படைத்துள்ளார்.


இவ்வெற்றி மூலம் அவர் தேனி மாவட்டத்திற்கும், தனது சொந்த மாவட்டமான தர்மபுரிக்கும், மேலும் FAKC மூக்காரெட்டிப்பட்டி கபடி அணிக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies