அரூர், அக். 09 -
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கான உள்ளுறை (Field) பயிற்சி தொட்டம்பட்டியில் உள்ள தனியார் நாற்றுப்பண்ணையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் அரூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் கோமதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேளாண்துறை சார்ந்த உயர்கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்கால வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி வழங்கினார்.
நாற்றுப்பயிற்சி நிலைய பயிற்சியாளர் டாக்டர் ராம்பிரசாத் அவர்கள் மாணவர்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் சரவணன், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.