Type Here to Get Search Results !

சோகத்தூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மசார்பில் மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது.


தருமபுரி, மார்ச். 05:


தருமபுரி மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மகளிர் திட்டத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி வட்டம் சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் எம். ஜான்சி ராணி கலந்து கொண்டு, உணவு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சத்தான உணவுகளை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த வெண்ணிலா, ரேகா, துளசி, சிவகாமி, நந்தினி, அம்பிகா, அம்சவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #WomenSelfHelpGroup #SHG #FoodFestival #RuralDevelopment #TamilNews #LocalNews 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies