பாப்பிரெட்டிப்பட்டி, செப். 04 (ஆவணி 17) -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் சார்லஸ், இந்திய அளவில் நடைபெற்ற லகோரி போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழ்நாடு லகோரி அசோசியேசன் அணியில் இடம்பெற்ற அவர், அணி சார்பில் பங்கேற்று இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இந்த வெற்றியை முன்னிட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம், கணினி ஆசிரியர்கள் பார்த்தீபன், ராஜாமணி உள்ளிட்டோர் சார்லஸுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.