தருமபுரி மாவட்டம் BSNL அலுவலகம் அருகில், AICCTU தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு AICCTU மாவட்ட செயலாளர் தோழர் முருகன் தலைமையேற்றார்.
“தூய்மை பணியில் தனியார்மயம் வேண்டாம்! – தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்! – அரசாணை 62-ன் படி சம்பளம் வழங்கு!” எனக் கோரியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் AITUC மாவட்ட செயலாளர் மற்றும் BSNL ஊழியர் தோழர் மணி, CPI (ML) Liberation மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ், புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழு தோழர் பெரியண்ணன், புரட்சிகர மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்கள் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் பேசினர். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினர்.