தேர்தல் கால போக்குவரத்து சிக்கல்
கடந்த காலங்களில் தேர்தல் நடைபெறும் போது, இந்த கிராமத்திற்கு கழுதைகளின் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக டிராக்டர் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுவே அந்தப் பகுதியின் போக்குவரத்து வசதி பற்றிய நிலையை வெளிப்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
BDO அலுவலகம் அருகே மறியல்
நீண்டநாள் கோரிக்கைகள் தீர்க்கப்படாததை கண்டித்து, பென்னாகரம் BDO அலுவலகம் அருகே தருமபுரி–பென்னாகரம்–ஒகேனக்கல் சாலையில் சுமார் இரண்டு மணி நேரமாக சாலை மறியல் நடைபெற்றது. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட போக்குவரத்து வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும் திண்டாடி வருவதாக மலை கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே வாக்குறுதிகள் வழங்கி, பின்னர் கவனிக்காமல் விடப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சாலை மறியலால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)