தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட ஆலாபுரம் கிராமத்தில், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு இயற்கை இடர்பாடுகள் வரும்போது எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் முன்னணியில், தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில், சுமார் 30 பேர் பங்கேற்றனர். தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தீயணைப்பு துறையின் அதிகாரி திரு. சு. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், பொதுமக்களுக்கு அவசரநேரங்களில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

