Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ₹4.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்துவைத்தார்.


பாலக்கோடு, மார்ச். 04:


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ₹4.60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் மற்றும் பள்ளி கூடுதல் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


பல்வேறு கட்டிடங்கள் திறப்பு

  • பேரூராட்சி அலுவலக கட்டிடம் – மூலதன மானிய நிதியில் ₹1.39 கோடி

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் – 6வது நிதிக்குழு மானியத்தில் ₹1.14 கோடி

  • அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் – ₹2.07 கோடி

இவ்வாறு மொத்தம் ₹4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.


பின்னர் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன் மற்றும் புனிதா குத்துவிளக்கு ஏற்றி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ், செயல் அலுவலர் இந்துமதி, திமுக ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, கவுன்சிலர்கள் பிரியா சிவக்குமார், சாதிக் பாஷா, ஹசினா வகாப் ஜான், பத்தேகான், ரூஹித், லட்சுமி ராஜசேகர், தீபா சரவணன், ஆயிஷா மசியுல்லா, சரவணன், ஜெயந்தி மோகன், பிரேமா முரளி, சிவசங்கரி ரவி, நாகலட்சுமி, மோகன், கவிதா, குருமணி, விமலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies