பாப்பிரெட்டிப்பட்டி, செப். 06 (ஆவணி 21):
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே மஞ்சவாடி கணவாய் பகுதியில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது.
ஆத்தூரில் இருந்து கிழங்கு திப்பி ஏற்றி ஊத்தங்கரைக்குச் சென்ற கனரக லாரி, நேற்று இரவு 10.00 மணியளவில் மஞ்சவாடி கணவாய் வனப்பகுதியை கடக்கும்போது, இடது புறம் பாடி சரிந்து விழுந்தது. இதனால் வாகனம் சாலையில் சிக்கிக் கொண்டது.
இரவு 11.00 மணி முதல் அந்தப்பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிகாலை நேரத்திலேயே சீரான போக்குவரத்து நிலை திரும்பியது. அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகடூர் குரல் செய்திகளுக்காக. பாப்பிரெட்டிபட்டி செய்தியாளர் – ஜெ. அருண்குமார்