தருமபுரி - மார்ச் 11:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இம்முகாம் இன்று (11.03.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். குணவர்மன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பெட்டிஷன் மேளாவில் பொதுமக்கள் அளித்த 57 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 57 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், அன்றைய தினம் புதிதாக 41 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)