பாலக்கோடு, செப். 06 (ஆவணி 21):
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புள்ளாலப்பட்டி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் ஆலய வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 108 சங்குகள் வைத்து யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர், திருவிளக்கு பூஜை (குத்துவிளக்கு பூஜை) நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.