Type Here to Get Search Results !

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சி – காரிமங்கலத்தில் எல்.இ.டி திரை ஒளிபரப்பு


தருமபுரி, 05 செப்டம்பர் 2025 (ஆவணி 20):


தந்தை பெரியாரின் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்து, “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்” சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சி, காரிமங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பார்வையிடும் வகையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், காரிமங்கலத்தில் திமுக கட்சி மாவட்ட அலுவலகம் எதிரில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் M.Sc., Ph.D., அவர்கள் தலைமையேற்றார். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.


கே. மனோகரன் (முன்னாள் எம்.எல்.ஏ), அ. சத்தியமூர்த்தி, கோ. ரமேஷ், பி.கே. அன்பழகன், எஸ். முனியப்பன், ஆனந்தன், எம்.வி.டி. கோபால், அடிலம் டி. அன்பழகன், ஆர். கண்ணபெருமாள், என்.ஏ. மாது, எம். பிரபுராஜசேகர், சி. முத்துக்குமார், எஸ். சரவணன், சி. தென்னரசு, எம். ரத்தினவேல், வழக்கறிஞர் டி. சந்திரசேகர், ஐ.டி. விங் கு. தமிழழகன், எஸ். பரணி, டி. ராஜேந்திரன், டி. ஜெயா, எம். கவிதா, பாம்பே. சக்தி, முல்லை ஆர்.என். செழியன், தீ. கோடீஸ்வரன், எம்.எம். சந்தோஷ்குமார், பி.வி. பொதிகைவேந்தன், கங்கா, டி. ராஜா, ஜே.சி.பி. கே. மோகன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- தருமபுரி செய்தியாளர் முருகேசன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies