தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்” சிறப்புரை ஆற்றிய நிகழ்ச்சி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கண்டுகளிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி தலைமையேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, பெரியண்ணன், வீரமணி, வைகுந்தம், நகர செயலாளர் நாட்டான் மாது, கௌதம், உதயசூரியன், மே. அன்பழகன், முல்லவேந்தன், வெல்டிங் ராஜா, அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.