பாலக்கோடு, 05 செப்டம்பர் 2025 (ஆவணி 20):
பாலக்கோடு பேரூராட்சி காவல் நிலையம் எதிரில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், பொது நிதி திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய நிழற்கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, நகர அவைத் தலைவர் அமானுல்லா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மோகன், குமரன், மாவட்ட பிரதிநிதி இருசன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் சரவணன், மோகன், லட்சுமி ராஜசேகர், வகாப் ஜான், ரூஹித், சாதிக் பாஷா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நிர்வாகிகள் மாதேஷ், சக்திவேல், சிவா, வேலு, ஞானம், மாபூப்ஜான், படவட்டை, ஹரிபிரசாத், அஜித் முருகன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தமிழரசன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.gif)

