தருமபுரி, 5 செப்டம்பர் 2025 (ஆவணி 20):
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய வளாகத்தில், பொதுமக்களின் நலன் கருதி நிலுவையில் உள்ள வழக்குகளை ஆராய்ந்து தீர்வு காணும் நோக்கில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின்படி, காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பானு கலந்து கொண்டு மனுக்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டார்.
அத்துடன், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார், நிலைய எழுத்தர் சின்னசாமி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகளை வழங்கினர்.
இந்த சிறப்பு மனு முகாமில் மொத்தம் 75 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாதமும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் இத்தகைய சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் இந்த முகாமினை பயனுள்ளதாகக் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தெரிவித்தார்.
.gif)

