Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே சொகுசு கார் – மோட்டார் சைக்கிள் மோதல் : கட்டிட மேஸ்திரி பலி.


பாலக்கோடு, [05.09.2025 / ஆவணி – 20]:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில் இளம் கட்டிட மேஸ்திரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பிரபு (31) கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. மனைவி உமா மற்றும் 4 வயது பெண் குழந்தை உள்ளனர்.


நேற்றிரவு பிரபு, பாலக்கோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மல்லசமுத்திரம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிளை நேருக்கு நேர் மோதியது. கடுமையாக காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார், பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies