பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, சேர்வராயன் வடக்கு வனச்சரகம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் நாவல் மரத்தினை கொண்டாடுவோம் நிகழ்வு நடைபெற்றது. சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையிலும், மனோகர் தினேஷ் குமார் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அலுவலர் பிரகாசம் மற்றும் உதவி திட்ட அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாவல் மரம் நடுதல் பணியை தொடங்கி வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் மரக்கன்றுகள் நடும் பணியில் பங்கேற்றனர்.