பொம்மிடி, செப்டம்பர் 24, 2025 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பையர்நத்தம் ஊராட்சியில் போலீசார் சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கத்துடன் மற்றும் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக, பஸ் ஸ்டாப், கடைவீதி, போக்குவரத்து அதிகரிக்கும் இடங்கள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதுவரை அந்த கேமராக்கள் மூலம் சமூக விரோதிகள் பலர் அடையாளம் காணப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆனால், தற்போது பையர்நத்தம் பஸ் ஸ்டாப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் பழுதடைந்ததோடு உடைந்து தொங்கிக்கொண்டு இருப்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு சிக்கல் எழுந்துள்ளது. எனவே, இயங்காமல் உள்ள கேமராக்களை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.