பென்னாகரம், செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே புதுக்கரம்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருமலை கோபால் சுவாமி திருக்கோயில் 35 ஆம் ஆண்டு திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் வளர்பிறை திரிதியை, சித்திரை நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் வழக்கம் உள்ளது. இவ்வருடம், கோபால் சுவாமி திருக்கல்யாணத்தில் நவராத்திரி கொலு பூஜை, சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜை, கங்கை பூஜை, வன்னிமரம் குத்துதல் ஆகிய பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்று, மக்கள் ஆனந்தம் அனுபவித்தனர்.
திருக்கல்யாணத்தில், மாப்பிள்ளை வீட்டார் மாரிமுத்து, பொண்ணு வீட்டார் பச்சை குருசாமி, ஊர் கவுண்டர் முனுசாமி, மந்திரி கவுண்டர் கிருஷ்ணன் கோல்காரர் முருகன், கோபால் சுவாமி பூசாரி பச்சியப்பன், முத்து மாரியம்மன் பூசாரி, கந்தன் செவத்தான், காட்டு மாரியம்மன் பூசாரி கோவிந்தசாமி, முனியப்பன் சாமி பூசாரி, மாணிக்கம் சேட்டு, கண்ணன் மார்கண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, திருக்கல்யாணத்தின் மகத்தையும் ஆனந்தத்தை அனுபவித்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.