பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப் பணித்திட்ட முகாம் இன்று சிறப்பாக துவங்கியது. விழாவில் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பட்டதாரி ஆசிரியர் தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் சக்திபால் நன்றியுரை வழங்கினார். முகாமின் முதல் நாளான இன்று, மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் ராஜேந்திரன் மற்றும் ரயில்வே ஓய்வுபெற்ற ஆனந்தன் மரக்கன்று நட்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் தொப்பையன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் இளவரசன், துணைத்தலைவர் உம்மேஹாணி, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் கணினி ஆசிரியர் பார்த்தீபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக முகாம் திட்ட அலுவலர் பிரகாசம் நன்றியுரை ஆற்றினார்.