பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் நிர்வாக அனைத்து நிலை அரசு ஊழியர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முகாம் தொடங்கிய பின்னர் அதிகரிக்கும் பணி சுமை, குறிப்பிட்ட நாட்களில் பணி முடிக்க வேண்டிய அழுத்தம், அலுவலக வேலைகளை சமநிலையில் செய்வதில் ஏற்பட்ட மன அழுத்தத்தை ஊழியர்கள் கண்டித்தனர்.
இதனையடுத்து, 9 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து வருவாய் அலுவலகங்களில் 90% ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஊழியர்கள் அரசு நிர்வாகத்திடம் மன அழுத்தம் ஏற்படும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் குறைவான கால அளவில் பணிகளை முடிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.