பாப்பிரெட்டிப்பட்டி, செப்டம்பர் 29 | புரட்டாசி 13:
பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் சேலம் மண்டல அளவிலான ஆண்கள் கபடி தெரிவுப் போட்டி இன்று தருமபுரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் கே. ஆகாஷ் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 8ஆம் வகுப்பு மாணவன் பி. திருப்பதி 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும் கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு வரும் நாட்களில் நடைபெறவுள்ள பெரம்பலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகன்ஜீவன்ராம் மற்றும் ஜெகன்குட்டிமணிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கலைவாணன், உதவி தலைமையாசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.