தருமபுரி, செப்டம்பர் 28 | புரட்டாசி 12:
இந்த நிகழ்வில் செயலாளர் டி.கே. பாபு, ரோஷன் முன்னா, பஜல் கரிம், தீபக் குமார், ஆயிஷா, ஐ.எஸ். பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மது மற்றும் கஞ்சா உட்கொள்ளுதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். மது குடிப்பதால் புற்றுநோய், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், ரத்த வாந்தி, கல்லீரல் செயலிழப்பு, கணைய பாதிப்பு, மாரடைப்பு அபாயம், ரத்த கொதிப்பு, சிறுமூளை பாதிப்பு போன்ற தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கஞ்சா பயன்படுத்துவதால் இரத்த அழுத்தம் அதிகரித்தல், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய், வலிப்பு நோய், கை நடுக்கம், பக்கவாதம், இதயத் துடிப்பு அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும் விளக்கினர்.
இந்நிகழ்ச்சியில் அப்சர், லியாகத் அலி, சையத் பிலால், மோகன் குமார், காதர் ஷெரிப், பைசல் பாஷா ஷெரிப் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அபாபில் சமுதாய நல சங்க செயலாளர் சையத் கலீம் நன்றியுரை வழங்கினார்.